MARC காட்சி

Back
திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில்
245 : _ _ |a திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில் -
246 : _ _ |a திருக்கச்சூர் ஆலக்கோயில்
520 : _ _ |a திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படும் விருந்திட்ட ஈஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற திருத்தலமாகும். பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டு வட்டத்தில் திருக்கச்சூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அந்தணர் வேடத்தில் வந்து இறைவன், சுந்தரரின் பசி தீர்த்தமை மற்றும் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து வழிபட்டமை ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன, மகாவிஷ்ணுவிற்கு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார் என்பதாக தலவரலாறு கூறுகிறது. இத்திருக்கோயிலின் மூலவர் கச்சபேசுவரர். இக்கோயில் தியாகராஜசுவாமி திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் தியாகராஜர் சந்நிதி உள்ள கோவில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். ஊர் நடுவிலுள்ளது கச்சபேசம் திருக்கோயில். இக்கோயில் ஆலக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தியாகராஜர் , அமிர்த தியாகேசர் என்றழைக்கப்படுகிறார். இத்தலம் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம்.
653 : _ _ |a சிவன் கோயில், பாடல் பெற்ற தலங்கள், தேவாரத் தலங்கள், தொண்டை மண்டலக் கோயில்கள், தமிழ்நாட்டு சிவாலயங்கள், திருஞானசம்பந்தர், காஞ்சிபுரம், திருக்கச்சூர், ஆலக்கோயில், கச்சபேசுவரர் கோயில், விருந்திட்ட ஈசுவரர் கோயில், ஈஸ்வரர் கோயில், செங்கல்பட்டு, அஞ்சனாட்சி, கன்னி உமையாள், சுந்தரர் பாடல் பெற்ற தலம், கச்சபம், ஆமை, கோயில், தியாகராஜசுவாமி கோயில், தொண்டை மண்டலம்
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 044 - 27464325, 09381186389
905 : _ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. பாடல் பெற்ற தலம். சுந்தரர் பாடியுள்ளார்.
914 : _ _ |a 12.772602
915 : _ _ |a 79.997102
918 : _ _ |a அஞ்சனாட்சி, கன்னி உமையாள்
922 : _ _ |a ஆல்
923 : _ _ |a கூர்ம தீர்த்தம்
924 : _ _ |a சிவாகமம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a மகாசிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர் ஓர் சுயம்பு லிங்கமாவார். நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். பதினாறு கால் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் ஆமை உருவில் மகாவிஷ்ணு சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது. கருவறையின் திருச்சுற்றில் தேவகோட்டத்தில் மூர்த்திகளாக விநாயகர், தென்முகக்கடவுள், திருமால், நான்முகன், துர்க்கை ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே சண்டேசுவரர் நான்கு முகத்துடன் காட்சி தருகிறார். இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
930 : _ _ |a அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தர மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.. இத்தலம் ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளி வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி வாழையிலை விரித்து அன்னம் பரிமாறி குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர் காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால் பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உண்வு கொடுத்ததாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்து போன சுந்தரர் எதிரே உள்ள குளத்திற்குச் சென்று கைகளைக் கழுவிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அந்தணர் மாயமாய் மறந்து போயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்து சென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.
932 : _ _ |a திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு கோபுரமில்லை. கோவிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. இக்குளத்திற்கு அருகில் தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்கு வெளிச் சுற்றில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு வெளிச் சுற்றில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து நேரே சென்றால் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால் இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோவிலாகவே உள்ளது. அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திதிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் இலிங்கவடிவில் உள்ளாரர். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது. கருவறை திருச்சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை திருச்சுற்று வலம் வரும்போது வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. வடக்கு வெளிச் சுற்றில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும், விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. வடக்கு வெளிச் சுற்றில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும் இருக்கிறது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருக்கச்சூர் மருந்தீசுவரர் கோயில்
935 : _ _ |a சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில் சுமார் 2 கி.மி. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.
936 : _ _ |a காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
937 : _ _ |a திருக்கச்சூர்
938 : _ _ |a செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில்
939 : _ _ |a மீனம்பாக்கம்
940 : _ _ |a செங்கல்பட்டு வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000319
barcode : TVA_TEM_000319
book category : சைவம்
cover images TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0010.jpg :
Primary File :

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0006.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0007.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0008.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0009.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0010.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0011.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0012.jpg

TVA_TEM_000319/TVA_TEM_000319_திருக்கச்சூர்_கச்சபேசுவரர்-கோயில்-0013.jpg